உலகின் 4வது பெரிய சிலை


குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்ட சர்தார் வல்லாபாய் பட்டேல் சிலைக்கு பிறகு இந்தியா மற்றொரு உயரமான சிலையை அதன் எண்ணிக்கையில் பெற உள்ளது.


ராஜஸ்தானில் உள்ள நதட்வாரா என்ற பகுதியில் இச்சிலை தற்போது உருவாகி வருகிறது. 351 அடி உயரத்தில் 2500 டன் இரும்பைக் கொண்டு இச்சிலை தயாராகி வருகிறது. இந்த திட்டம் 2013 ஆம் ஆண்டில் மிராஜ் குழுமத்தால் சுமார் 175 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது.



110 அடி அடித்தளம் கொண்ட இந்த சிலையில், சிவனின் தோள்கள் 260 அடி உயரத்தில் உள்ளன, அதே நேரத்தில் அவரது திரிசூலம் 315 அடி வரை உயர்ந்துள்ளது. 3 பார்வை மாடங்கள் 20 அடி, 110 அடி, 270 அடி உயரத்தில் அமைந்துள்ளன. இங்கு லிப்ட் மூலம் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. "உயர்தர செம்புகளால் மெருகூட்டப்பட்டு, துத்தநாகத்தால் கட்டப்பட்ட பீடத்தில் இம்முழு சிலையும் அமர்ந்திருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சிவன் சிலைக்கு எதிரில் 37 அடி அகலமும் 25 அடி உயரமும் கொண்ட ஒரு நந்தி சிலையும் இருக்கும். இந்த திட்டத்தில் கிட்டத்தட்ட 750 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிலையைச் சுற்றி 300 சதுர அடி பரப்பளவில் ஒரு தோட்டம் அமைக்கப்படும்.  



இந்த சிலை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலையின் கட்டுமானம் இந்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலை, சீனாவின் புத்தா் சிலை, மியான்மரில் லேகுன் செக்யா சிலையைத் தொடா்ந்து நான்காவது பெரிய சிலையாக ராஜஸ்தான் சிவன் சிலை இருக்கும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தொடர்ந்து படிக்க " பில்டர்ஸ் வேர்ல்ட்" மாத இதழை Subscribe செய்யுங்க. ஒரு வருஷத்துக்கு சந்தா, ஜஸ்ட் ரூபாய் 360/-  மட்டுமே. தொடர்புக்கு: 63819 63636/ 94441 31213.