ஐநாக்ஸ் நிறுவனத்தின் முதல் மெகாபிளக்ஸ் திரையரங்கத்தை மும்பையில் தொடங்கியுள்ளது!


ஒரு திரை மட்டுமே கொண்டிருந்த திரையரங்கத்தில் தொடங்கி இன்று பல திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களில் நாம் படங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் முதல் முறையாக 11 திரைகளை கொண்ட மெகாபிளக்ஸ் என்ற திரையரங்கத்தை புகழ்பெற்ற ஐநாக்ஸ் நிறுவனம் மும்பையில் Malad பகுதியில் உள்ள Inorbit மாலில் தொடங்கியுள்ளது. 60,000 சதுர அடி பரப்பளவில், 1,586 சீட்களை கொண்ட இந்த மெகாபிளக்ஸில் 11 திரைகள் உள்ளன. இதன் மூலம் ஒரு நாளைக்கு 60 ஷோக்களை திரையிடுவதுடன் அதிகபட்சமாக 000 ரசிகர்களையும் படம் பார்க்க வைக்க முடியும். இது 60 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் ஒன்றின் விலை 150ல் தொடங்கி அதிகபட்சமாக ரூ.1,000 வரை விற்கப்படும் எனவும், IMAX, 4DX, Screenx உட்பட 6 விதமான சினிமா வடிவங்களில் படம் பார்க்கும் வசதி கிடைப்பதுடன் லெதர் சீட்கள், உணவு வகைகள் என பல விதமான சிறப்பு வசதிகளையும் இந்த மெகாபிளக்ஸ் கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளை மகிழ்விக்க தனி விளையாட்டு அரங்கமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்தமாக 800 திரைகளை கொண்டு இந்தியாவின் நம்பர்-1 நிறுவனமாக செயல்பட்டு வரும் பிவிஆர் சினிமாஸின் திரை எண்ணிக்கையைவிட கூடுதலாக, மொத்தம் 900 திரைகளை அடுத்த சில ஆண்டுகளில் நிறுவ ஐநாக்ஸ் திட்டமிட்டுள்ளதாக அதன் இயக்குனர் சித்தார்த் ஜெயின் கூறியுள்ளார்.


மாயாஜால்


ஐநாக்ஸ் நிறுவனம் தற்போது தான் திரைகளை கொண்ட திரையரங்கத்தை நிறுவியிருந்தாலும் கூட சென்னையில் உள்ள மாயாஜால் மால் தான் இந்தியாவிலேயே அதிக திரைகளை கொண்ட திரையரங்கமாக விளங்குகிறது. இங்கு மொத்தம் 16 திரைகள், 2600 சீட்கள் உள்ளன, ஒரு நாளைக்கு 80 ஷோக்கள் காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.